Please visit Amazon Author Page at

https://www.amazon.com/author/balu



Friday, June 17, 2022

Thoughts arise (எண்ணங்கள் உதிக்கின்றன)


Friends, my apologies to those who cannot read Tamizh. This was a sudden inspiration and I had to do it only in Tamizh. 

எண்ணங்கள் உதிக்கின்றன. 

எண்ணங்கள் உள்ளே உதிக்கின்றன. அவை மொழியாக தோன்றுகின்றன. சில பொழுது தமிழில் தோன்றும். சில பொழுது ஆங்கிலத்தில் தோன்றும். இன்று தமிழில் தோன்றியது.

காலை நேரம். மெதுவான வெய்யில். குளிறான காற்று. இயற்கை அன்னையின் உள்ளே நிற்கிறேன். இயற்கையை அனுபவிக்கிறேன்.

இயற்கை எனக்கு வெளியிலா, தனிப்பட்டதா?

ஆனால் நான் அதை அனுபவிக்கிறேனே.  அப்படியானால் அது எனக்கு உள்ளேயா?

இரண்டும்தான். நானும் இயற்கையும் ஒன்று.

இயற்கை என்பது எது? அது எனக்கு உள்ளே தோன்றும் காட்சியா? அப்படி இருக்க முடியாது. அந்த காட்சியில் நான் என்ற தனிப்பகுதி சேர்ந்து விட்டது. இயற்கையின் உள்தன்மையை எப்படி காண்பது?

நானும் இயற்கையும் ஒன்று.

நீயும் இயற்கையும் ஒன்று.

நான் யார்?  அதுதான் ரமணரின் கேள்வி.

நான் என்பது இயற்கையின் ஒரு சிறு பகுதி.

அதற்கு உடல் உண்டு, உயிர் உண்டு,

உணர்வு உண்டு, உள்ளம் உண்டு,

உடலை காண, உயிரை காண,

உணர்வை காண, உள்ளத்தை காண,

உள்ளுணர்வு என்று ஒன்றும் உண்டு.

அது எனக்கும் உண்டு.

அது உனக்கும் உண்டு.

ஊமைக்கும் உண்டு.

மீனுக்கு உண்டு, மயிலுக்கு உண்டு, முயலுக்கு உண்டு.

அந்த உள்ளுணர்வுக்கு மூலம் எது?

மூச்சு அடைக்கிறது!

 

No comments: